(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட்-19) – உலகளவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 15 மில்லியனை கடந்துள்ளது.
கொரோனா வைரஸ் தற்போது உலகின் 215 நாடுகளுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.
இதற்கமைய, இதுவரை சர்வதேச ரீதியில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 15,098,721 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் இந்த வைரஸ் தொற்றினால் 619,593 பேர் உயிரிழந்துள்ளதுடன், 9,116,242 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.
இதேவேளை, கொரோனா தொற்றினால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவில் 4,028,569 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அத்துடன் இதுவரை அங்கு, 144,953 பேர் உயிரிழந்துள்ளனர்.