உலகளாவிய நட்பு எல்லையை சுருக்கி உள்ளங்கை அளவில் கைபேசிக்குள் அடக்கிய பெருமை சமூக வலைத்தளங்களில் முதலிடத்தில் உள்ள முகநூல் (Facebook) இனையே சாரும் என்பது யாவரும் அறிந்ததே..
உலகளாவிய அளவில் 131 கோடி மக்கள் facebook மூலம் தங்களது வாழ்வின் சுக-துக்கங்களை தங்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் பகிர்ந்து வருகின்றனர்.
21 கோடி பயனாளிகளுடன் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக மாதந்தோறும் facebook பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை இந்தியாவில்தான் அதிகமாக உள்ளது. இந்நிலையில், அடோப் இந்தியா நிறுவனத்தில் பணியாற்றி வந்த உமங் பேடி (umang bedi )என்பவர் கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை மாதம் facebook நிறுவனத்தின் இந்தியா மற்றும் தெற்காசியாவுக்கான நிர்வாக இயக்குநராக பொறுப்பேற்றார்.
இந்நிலையில், நாளொரு மேனி – பொழுதொரு வண்ணமாக வளர்ச்சி அடைந்து வரும் facebook நிறுவனத்தில் இருந்து விலக உமங் பேடி தீர்மானித்துள்ளார். அவரை வரும் டிசம்பர் மாத இறுதியில் விடுவிக்க facebook நிறுவன தலைமை விருப்பம் தெரிவித்துள்ளது.
(riz_mira)