உலகின் பந்து வீச்சு ராஜா; எதிர்காலம் இலங்கை வசம் (VIDEO)

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தென்னாபிரிக்காவில் இடம்பெறும் 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண போட்டியானது இடம்பெற்றுவரும் நிலையில் இந்தியாவுடனான போட்டியில் உலகின் வேகமாக பந்து வீசும் பந்து வீச்சாளராக 17 வயதுடைய இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் மத்தீஷா பதிரானா  தட்டிச் சென்றுள்ளார்.

இந்தியாவுடனான அண்மைய போட்டியின் போது, இலங்கை அணியானது 90 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தாலும், நான்காவது ஓவரில் ஐந்தாவது பந்து வீச்சில் ஒரு மணிக்கு 175 கிலோமீட்டர் வேகத்தில் பந்தினை வீசியுள்ளார். இது இதுவரை பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சொயிப் அக்தரின் சாதனையினை வீழ்த்தியுள்ள ஒரு கணமாக பதிவாகியுள்ளது.

கடந்த 2003ம் ஆண்டு அக்தரினால் மணிக்கு 161.3 கிலோமீட்டர் வேகத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக பந்து வீசியமை சாதனையாக பதிவாகியமையும் குறிப்பிடத்தக்கது.

மதீஷவுக்கு முன்னர் சர்வதேச மைதானத்தில் உலகின் வேகப் பந்து சாதனையில் சாதித்தவர்கள்

1. சொயிப் அக்தர் (பாகிஸ்தான்) மணிக்கு கிலோமீட்டர் 161.3

2. ப்ரெட் லீ (அவுஸ்திரேலியா) மணிக்கு கிலோமீட்டர் 161.1

3. ஷோன் டய்ட் (அவுஸ்திரேலியா) மணிக்கு கிலோமீட்டர் 161.1

4. ஜெப்ரி தோமஸ் (அவுஸ்திரேலியா) மணிக்கு கிலோமீட்டர் 160.6

5. மிச்சேல் ஸ்டோக் (அவுஸ்திரேலியா) மணிக்கு கிலோமீட்டர் 160.4

6. என்ட்ரி ரோபட்ஸ் (மேற்கிந்திய தீவுகள் அணி) மணிக்கு கிலோமீட்டர் 159.5

7. பிடேல் எட்வர்ட் (மேற்கிந்திய தீவுகள் அணி) மணிக்கு கிலோமீட்டர் 157.7

8. மிச்சேல் ஜொன்சன் (அவுஸ்திரேலியா) மணிக்கு கிலோமீட்டர் 156.8

9. முஹம்மத் சமி (பாகிஸ்தான்) மணிக்கு கிலோமீட்டர் 156.4

10. ஷோன் பொன்றி (நியூசிலாந்து) மணிக்கு கிலோமீட்டர் 156.4