உலகின் முதல்தர அணி உலக கிண்ண தொடரில் இருந்து வெளியேற்றம்…

உலகின் முதல்தர அணியான ஜேர்மன் அணி 2018 ஆம் ஆண்டின் உலக கிண்ண கால்பந்தாட்ட போட்டிகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளது.

உலகக் கிண்ண கால்பந்து தொடர் ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது. நடப்பு சாம்பியனான ஜேர்மன் அணி, கொரியா குடியரசை நேற்று(27) எதிர் கொண்டது. குறித்த இந்த போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்துடன் ஜேர்மனி அணி களமிறங்கியது.

எனினும், கொரியா அணி 2-0 என முன்னிலை பெற்ற நிலையில் ஜேர்மன் அணியால் கோல் அடிக்க முடியாததால் கொரியா அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இதனால் ‘F’ பிரிவு புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்ட ஜேர்மன் அணி தொடரை விட்டும் வெளியேறியமை குறிப்பிடத்தக்கது.