உலகின் முதல்தர சுழல்பந்து வீச்சாளருக்கு போட்டித் தடை…

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பந்து வீசுவதற்கு பாகிஸ்தான் அணியின் சுழல்பந்து வீச்சாளர் மொஹமட் ஹாபீசிற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அணியுடனான போட்டியின் போது முறையற்ற பந்து வீச்சில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்த நிலையிலேயே, குறித்த இந்த குற்றச்சாட்டுக்கமைய கடந்த முதலாம் திகதி அவர் லண்டனில் உள்ள பல்கலைகழகம் ஒன்றில் பந்து வீச்சு சோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.

இதற்கமைய மொஹமட் ஹாபீசிற்கு பந்து வீச சர்வதேச கிரிக்கட் பேரவை தடை விதித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

#rizmira