உலகின் முதல் நிர்வாண விமான பயணத்தினை இலண்டன் அறிமுகம் செய்கிறது…

(FASTNEWS | COLOMBO) – எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30ம் திகதி முதல் லண்டனில் தொண்டு நிறுவனங்களுக்கு நிதி திரட்டுவதற்காக உலகின் முதல் நிர்வாண விமான பயணமான London in the Sky என அறிவிக்கப்படும் பயணத்தினை தொடங்கவுள்ளது.

அதாவது, Movember, Coppafeel ஆகிய இரண்டு தொண்டு நிறுவனங்களுக்கு நிதி திரட்டும் பொருட்டு இந்த பயணம் மேற்கொள்ளப்படவுள்ளது. இதில், Coppafeel தொண்டு நிறுவனம் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்து வருகிறது மற்றும் Coppafeel தொண்டு நிறுவனம் மனநல பிரச்சினைகள் தொடங்கி இன்று ஆண்கள் எதிர்கொள்ளும் உடல் நலப்பிரச்சினைகளில் கவனம் செலுத்தும் பணியை செய்து வருகிறது.

இந்த பயணத்தின் போது பயணிகளுக்கு போதுமான வசதிகள் செய்து கொடுக்கப்படும். ஆண்கள் மற்றும் பெண்கள் என தனித் தனியாக அழைத்து செல்லப்படுவார்கள், ஒரு பயணத்திற்கு 22 பேர் மட்டுமே அழைத்து செல்லப்படுவார்கள்.

ஒரு நபருக்கான விமான பயண செலவு 99 பவுண்ட் ஆகும். ஏப்ரல் 30 ஆம் திகதி லண்டன் நேரப்படி காலை 8.30 மணியளவில் இந்த பயணம் ஆரம்பமாக உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.