தண்டவாளம் எதுவும் இன்றி சாலையில் வரையப்பட்டுள்ள கோட்டின் மீது செல்லும் உலகின் முதல் ஸ்மார்ட் புகையிரதம் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சீனாவில் சாலையில் வரையப்பட்டுள்ள கோட்டின் மீது மணிக்கு 70 கி.மீ. வரை வேகத்தில் செல்லும் உலகின் முதல் ஸ்மார்ட் புகையிரதம் தனது சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக முடித்து பயணத்தை ஆரம்பித்துள்ளது.
ஏ.ஆர்.டி. என்று அழைக்கப்படும் இந்த புகையிரதம் மூன்று பெட்டிகளை கொண்டுள்ளதுடன் இதில் 300 பேர் பயணம் செய்யலாம். மற்றைய புகையிரதம் அல்லது டிராம் போக்குவரத்திற்கு ஆகும் செலவை விட குறைந்த அளவான தொகையே இதற்கு செலவாகிறது.
தற்பொழுது ஹூனான் மாகாணம் சுஜோவ் நகரில் நான்கு நிலையங்களை கொண்ட 3.1 கி.மீ. தொலைவிற்கு மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டு, புகையிரதம் இயக்கப்படுகிறது. அடுத்த ஆண்டு முதல் முக்கிய சாலைகளில் இயங்கத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்மார்ட் புகையிரதமானது சாரதி இல்லாமல் தானாக செயல்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆரம்பத்தில் சாரதி இருப்பார். அதன் பின் முழுவதுமாக தானியங்கி வாகனமாக செயல்படும் என கூறப்படுகிறது. இது மக்களுக்கு மிகவும் பயன்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.