முற்றிலும் இணைய வழியில் இயங்கக்கூடிய உலகின் முதல் ஸ்மார்ட் பொலிஸ் நிலையம் துபாயில் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
குறித்த ஸ்மார்ட் பொலிஸ் நிலையத்தில், புகார் அளித்தல், போக்குவரத்து அபராதம் செலுத்துதல், விபத்து குறித்து பதிவு செய்தல், தேவையான ஆவணங்கள் பெறுதல் உள்ளிட்ட 60 சேவைகளை பொதுமக்கள் பெற முடியும் என தெரிவித்துள்ளது.
ஸ்மார்ட் பொலிஸ் நிலையத்தில் வரும் மக்கள், அந்நிலையத்தின் முகப்பு அறையில் வைக்கப்பட்டிருக்கும் இயந்திரத்தில் தாங்கள் எந்த சேவையை பெற வந்திருக்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்திய பின்னர் அவர்கள் காணொலிக்காட்சி மூலம் பொலிஸ் அதிகாரியை தொடர்பு கொண்டு தங்களுடைய புகாரை பதிவு செய்யலாம்.
காணொலிக்காட்சி மூலம் 24 மணி நேரமும் பொலிஸ் அதிகாரியை தொடர்பு கொள்ளலாம்.