உலகின் முன்னணி நட்சத்திர வீரர்கள் பங்கேற்கும் ஐஸ் கிரிக்கெட் (ICE cricket) போட்டி சுவிட்சர்லாந்தில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் நடைபெறவுள்ளது.
சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் (Swiss Alps)பனிமலைத் தொடரில் எதிர்வரும் பெப்ரவரி 8, 9ஆம் திகதிகளில் இரண்டு T-20 போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
குறித்த இந்த ஐஸ் கிரிக்கெட் போட்டியில் இலங்கையைச் சேர்ந்த மஹேல ஜயவர்த்தன, லசித் மாலிங்க, திலகரத்ன டில்சான் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
கடல் மட்டத்தில் இருந்து 5,910 அடி உயரத்தில் உள்ள இப்பகுதியில் வித்தியாசமான முயற்சியாக பனிக்கட்டி மைதானத்தில் கிரிக்கெட் போட்டி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
#rishma