உலகிலேயே சிறந்த ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களில் சனத் மற்றும் சங்கா (விவரம்)

அவுஸ்திரேலிய கிரிக்கெட் இணையத்தளமான  cricket.com.au என்ற அவுஸ்திரேலிய இணையத்தளத்தில் உலகிலேயே சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர்களினது பெயர்களை பட்டியலிட்டு வெளியிட்டுள்ளது.

இலங்கை அணி சார்பில் சனத் ஜயசூரிய மற்றும் குமார் சங்கக்கார ஆகியோரும் குறித்த பிரபல 16 வீரர்களில் அடங்குகின்றனர்.  

எவ்வாறாயினும், குறித்த தெரிவில் இலங்கை அணி சார்பில் அரவிந்த டி சில்வா , டி.எம் டில்ஷான் , மஹேல ஜெயவர்தன , சனத் ஜயசூரிய, முத்தையா முரளிதரன், குமார் சங்கக்கார,சமிந்த வாஸ் மற்றும் லசித் மாலிங்க ஆகியோர் தெரிவாக்கப்பட்டிருந்தாலும் இறுதியில் இருவரே தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.

குறித்த பட்டியலில் பாகிஸ்தான் அணியினரே அதிகளவு உள்வாங்கப்படுள்ளமை விசேடமானது.

உலகிலேயே மிகவும் சிறந்த ஒருநாள் போட்டிக்கான 16 பேரினதும் விவரம்

சச்சின் டெண்டுல்கர் (இந்தியா)

மைக்கல் பேவன் (அவுஸ்திரேலியா)

விவ் ரிச்சர்ட் (மேற்கிந்திய தீவு)

ஜாவித் மியண்டாத் (பாகிஸ்தான்)

விராட் கோஹ்லி (இந்தியா)

இன்சமாம் உல்-ஹக் (பாகிஸ்தான்)

சனத் ஜயசூரிய (இலங்கை)

ரிகி பொண்டிங் (அவுஸ்திரேலியா)

வஸீம் அக்ரம் (பாகிஸ்தான்)

வகார் யூனிஸ் (பாகிஸ்தான்)

இம்ரான் கான் (பாகிஸ்தான்)

கேட்ர்லி அம்ப்ரோஸ் (மேற்கிந்திய தீவு)

குமார் சங்கக்கார (இலங்கை)

ஏ.பி.த்ரிவில்லியர் (தென் ஆப்பிரிக்கா)

ஷேன் வார்ன் (அவுஸ்திரேலியா)

சஹித் அப்ரிடி (பாகிஸ்தான்)