உலகிலேயே பெரிய { A -380 Airbus } எனும் விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று(22) அதிகாலை 05.30 மணிக்கு திடீர் என தரையிறக்கப்பட்ட தாக தெரிவிக்கப்படுகிறது.
டுபாய் நகரில் இருந்து அவுஸ்திரேலியா நோக்கி பயணித்த குறித்த விமானத்தில் இருந்த ஒருவருக்கு சுகயீனம் ஏற்பட்டுள்ள நிலையில் இவ்வாறு தரையிறக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
விமானத்தில் சுகயீனமுற்ற பயணி கட்டுநாயக்க விமான நிலைய மருத்துவ மத்திய நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக நீர்கொழும்பு மருததுவமனையிற்கு கொண்டு செல்லப்பட்டார்.
காலை 7.40 க்கு விமானம் அவுஸ்திரேலியா – சிட்னி விமான நிலையம் நோக்கி பயணித்ததாக தெரிவிக்கப்படுகிறது.