உலகில், வளர்ச்சியடைந்த நாடுகள் பலவற்றில் fb பாவனை இல்லை… அதி குறித்து சிந்திப்போம் – மஹிந்த

கண்டி மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக நிலவிய அசாதாரண நிலைமையை அடுத்து, சமூக வலைத்தளங்களான பேஸ்புக், வட்ஸ்அப் மற்றும் வைபர் போன்றனவுக்குத் ​தடை விதிக்கப்பட்டு முடக்கப்பட்டன.

இருப்பினும், இவை மீண்டும் செயற்படும் நாள் தொடர்பில், அரசாங்கத்தால் இதுவரை அறிவிக்கப்படவில்லை. இது தொடர்பில், மீன்பிடி மற்றும் நீர் வளங்கள் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிக்கையில்;

“..உலகில், வளர்ச்சியடைந்த நாடுகள் பலவற்றில், குறித்த இந்த சமூக வலைத்தளங்களைச் செயற்படுத்த இடமளிக்காமல், முற்றாக முடக்கப்பட்டுள்ளன. இதற்கு, சீனாவே சிறந்த உதாரணமாகும்.

உண்மையில், பேஸ்புக் வலைத்தளத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதனால், இது தொடர்பில் பொதுமக்களின் கருத்துகளைக் கேட்க வேண்டிய கட்டாயமுள்ளது. எந்தவொரு விடயமாயினும், அது, நாட்டுக்குத் தேவயான அல்லது நல்லதாயின், அதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

ஆனால், நாட்டுக்குத் தீங்கு விளைவிக்கும் விடயமாயின், அது தொடர்பிலான தீர்மானமொன்றை எடுக்க வேண்டியது அத்தியாவசியமாகும். எவ்வாறியினும், பேஸ்புக்குக்குத் தடை விதிப்பதை விட, கட்டுப்படுத்துவதே அவசியம்..” என தெரிவித்துள்ளார்.

 

 

#rishma