facebook நிறுவனத்தின் மற்றொரு நிறுவனம் Instagram. சமூக வலைதள பயனாளர்கள் மத்தியில் பிரபலமானவைகளில் ஒன்றாக உள்ள Instagram, புகைப்படங்களை share செய்யும் வசதியையும் கொண்டதாகும்.
உலக அளவில், நெட்டிசன்கள் மத்தியில் இன்ஸ்டாகிராம் (Instagram) தனித்த இடத்தை பெற்றுள்ளது. இந்நிலையில், இன்று(04) டுவிட்டரில் திடீரென #InstagramDown என்ற ஹேஷ்டேக் (#) உலக அளவில் டிரெண்ட் ஆனது.
லண்டன், சிங்கப்பூர், சான் பிரான்ஸிஸ்கோ உள்ளிட்ட நகரங்களைச் சேர்ந்த பல பயனாளர்கள், தங்கள் டுவிட்டரில், இன்ஸ்டாகிராம்டைவுன் (#InstagramDown) என்ற ஹேஷ்டேக் பதிவுகளை வெளியிட்டு திணறடிக்கச் செய்தனர்.
Timeline இல் Refresh ஆகாமல் error message காண்பித்ததாக Reuters நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால், இந்த விவகாரம் குறித்து Instagram தரப்பிலோ, facebook நிறுவனம் தரப்பிலோ எந்த கருத்தும் வெளியாகவில்லை.
வடக்கு அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, இந்தியா, சிங்கப்பூர் உட்பட பல்வேறு நாடுகளில் Instagram முடங்கியதாக பரவலாக செய்திகள் வெளியாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.