எய்ட்ஸ் நோயால் அதிகம் பாதிக்கப்படும் தமிழக இளைஞர்கள் உலக எய்ட்ஸ் தினம் இன்று(01) அனுசரிக்கப்படும் நிலையில், இளைய சமுதாயத்தினர் பலர் ஹெச்.ஐ.வி நோய் தொற்றால் அதிகம் பாதிக்கப்படுவது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
1988ம் ஆண்டு முதல் டிசம்பர் 01ம் திகதி உலக எய்ட்ஸ் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்நாளில் எய்ட்ஸ் பாதிப்பு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.