(FASTNEWS|COLOMBO) – உலக கிண்ண வலைப்பந்தாட்ட இறுதிபோட்டியில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தி நியுசிலாந்து அணி செம்பியனாகியுள்ளது.
லிவர்பூலில் நேற்று இடம்பெற்ற வலைப்பந்தாட்ட இறுதி போட்டியில் நியூசிலாந்து அணி, அவுஸ்திரேலியாவை 52 க்கு 51 என்ற கோல் கணக்கில் வெற்றிக்கொண்டது.
இதன்படி 11 வருடங்களாக செம்பியன் பட்டத்தை வென்ற அவுஸ்திரேலியா அணியை நியூசிலாந்து அணி தோற்கடித்துள்ளது.
இந்நிலையில், 16 வருடங்களின் பின்னர் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.
இதற்கு முன்னர் இடம்பெற்றிருந்த போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை வென்று இங்கிலாந்து மூன்றாம் இடத்தை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
