உலக நாடுகளின் அலட்சியத்தால் 70 மில்லியன் குழந்தைகள் உயிரிழக்கும் அபாயம் – ஐ.நா

சர்வதேச நாடுகளின் அலட்சியத்தால் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக அடுத்த 15 ஆண்டுகளுக்குள் சுமார் 70 மில்லியன் குழந்தைகள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஐ.நா சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஐ.நா சபையில் ஒரு அங்கமாக விளங்கும், குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பான Unicef மேற்கொண்ட ஆய்வின் முடிவுகளை இன்று வெளியிட்டுள்ளது.

அதில், சர்வதேச அளவில் போதமான ஊட்டச்சத்து இல்லாமல் தவித்து வருவதுடன், அவர்களின் இறப்பு எண்ணிக்கையும் அதிகரித்து வருவது வேதனை அளிக்கிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு குழந்தையானது தனது 5 வயதை முடிப்பதற்குள் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக இறக்க நேரிடுகிறது.

ஊட்டச்சத்து குறைப்பாட்டை தடுக்க முடியும். ஆனால், உலக நாடுகள் அதற்கான நடவடிக்கையில் ஈடுப்படுவதில்லை என ஐ.நா கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பேசிய Unicef-ன் தலைமை அதிகாரியான என்தோனி லேக், இந்த பூதகரமான பிரச்சனையை முற்றிலுமாக தீர்க்க உலக நாடுகள் ஏழை மற்றும் பின்தங்கிய குழந்தைகளுக்கு உதவ முன்வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

தற்போதைய காலத்திலும் கூட, உலகம் முழுவதிலும் சுமார் 119 குழந்தைகள் போதமான ஊட்டச்சத்து மற்றும் ஆதரவு இல்லாமல் போராடி வருகிறார்கள்.

ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக ஒவ்வொரு ஆண்டும் சுமார் 6 மில்லியன் குழந்தைகள் இறக்கின்றனர். ஆனால், கடந்த சில ஆண்டுகளில் இறப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது.

25 வருடங்களுக்கு முன்னர் குழந்தைகள் இறப்பு எண்ணிக்கை 12.7 மில்லியனாக இருந்தது என்றும், அது தற்போது 6 மில்லியனாக குறைந்துள்ளது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.