உலக நாடுகளின் எந்த துறைமுகத்திற்கும் வடகொரியாவின் கப்பல்கள் செல்லத் தடை…

வடகொரியாவின் 4 கப்பல்களும் உலக நாடுகளின் எந்த துறைமுகத்திற்கும் செல்லக் கூடாது என்று ஐ.நா. பாதுகாப்பு சபை நேற்று(10) தடை விதித்துள்ளது.

ஐ.நா. பாதுகாப்பு சபை விதித்த பல்வேறு பொருளாதார தடைகளையும் மீறி தொடர்ந்தும் வடகொரியா அணு ஆயுத சோதனையில் ஈடுபட்டு வருகின்ற நிலையில், இதற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும், வடகொரியா மீது மிகக் கடுமையான தடைகளை விதிக்கவேண்டும் எனவும் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் ஐ.நா. பாதுகாப்பு சபை நேற்று(10) வடகொரியாவின் பெட்ரெல் 8, ஹாவோ பான் 6, டோங் சான் 2, ஜி சுன் ஆகிய 4 கப்பல்களும் உலக நாடுகளின் எந்த துறைமுகத்திற்கும் செல்லக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளது.

இதேவேளை, ஐ.நா.வின் விதிமுறை மீறியமைக்காக குறிப்பிட்ட ஒரு நாட்டின் கப்பல்களை உலக நாடுகளின் துறைமுகங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு இருப்பது இதுவே முதல் முறை என்று ஐ.நா. பாதுகாப்பு சபையின் ஒருங்கிணைப்பாளர் ஹூயூஜ் கிரிபித்ஸ் தெரிவித்துள்ளார்.