(FASTNEWS|COLOMBO) – உலக பணக்காரர்கள் பட்டியலில் 2வது இடத்தில் இருந்த பில்கேட்ஸ், தனது இடத்தில் இருந்து இறங்கியுள்ளார்.
அமெரிக்காவைச் சேர்ந்த புளூம்பெர்க் எனும் நிறுவனம் உலக பணக்காரர்கள் பட்டியலை அவ்வபோது வெளியிட்டு வருகிறது. இந்த பட்டியலில் பல ஆண்டுகளாக தொடர்ந்து முதலிடத்தில் இருந்தவர் பில்கேட்ஸ்.
அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் முதலாம் இடத்திற்கும், பிரான்சைச் சேர்ந்த பெர்னார்ட் அர்னால்ட் என்பவர் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.
இவர் எல்விஎச்எம் எனும் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆவார்.
புளூபெர்க் நிறுவனத்தின் உலக பணக்காரர்கள் பட்டியலின்படி,
1. ஜெப் பெசோஸ் – 125 பில்லியன் டாலர்
2. பெர்னார்ட் அர்னால்ட் – 108 பில்லியன் டாலர்
3. பில்கேட்ஸ் -107 பில்லியன் டாலர்