உலக பதினொருவர் அணியுடனான தொடரிலிருந்து ஆமிர் விலகல்..

உலக பதினொருவர் அணியுடன் நடைபெறவுள்ள 20க்கு 20 கிரிக்கெட் போட்டியில் விளையாடாதிருக்க பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் ஆமிர்  தீர்மானித்துள்ளார்.

அவரது மனைவி முதல் பிரசவத்திற்காக இங்கிலாந்து சென்றுள்ளமையே இதற்கு காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் குறித்த 03 போட்டிகளிலும் ஆமிர் விளையாட மாட்டார் என தெரிவிக்கப்படுகின்றது.

பாகிஸ்தான் அணி மற்றும் உலக பதினொருவர் அணிகளுக்கு இடையிலான 20க்கு 20 போட்டிகள் மூன்றும் முறையே 12,13,15 நாட்களில் நடைபெறவுள்ளது.

மொஹமட் ஆமிர் இதுவரையில் 20க்கு 20 போட்டிகளில் 31ல் பங்கேற்று 34 விக்கெட்களை கைப்பற்றி இருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)