உலக முஸ்லிம் சம்மேளனத்தின் பொதுச் செயலாளருக்கும் பிரதமருக்கிடையில் சந்திப்பு

(FASTNEWS|COLOMBO) – உலக முஸ்லிம் சம்மேளனத்தின் பொதுச் செயலாளரும் சர்வதேச பாடசாலைகள் அமைப்பின் தலைவருமான கலாநிதி முஹம்மத் பின் அப்துல்லா கரீம் அல் இஷா Dr. Mohamed bin Abdullah Karim al-Issa தலைமையிலான குழுவினருக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்குமிடையில் அலரி மாளிகைளில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலின் பின்னர் பயங்கரவாதிகளை கைது செய்வதற்கும் நாட்டின் நிலைமையை வழமைக்குக் கொண்டு வருவதற்கும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை தொடர்பில் இதன்போது பிரதமர் தெளிவுபடுத்தினார்.

இது தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு உலக முஸ்லிம் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் பாராட்டுக்களைத் தெரிவித்தார். இனங்களுக்கிடையில் சகவாழ்வை கட்டியெழுப்ப தான் முன்னின்று செயற்படுவதாக உலக முஸ்லிம் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் குறிப்பிட்டார்.

இதேவேளை தாக்குதலினால், பாதிப்படைந்தவர்களுக்கு நிவாரணம் வழங்கும் நிதியத்திற்கு ஐந்து மில்லியன் டொலர்களை வழங்க இதன்போது உலக முஸ்லிம் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் மற்றும் சர்வதேச பாடசாலைகள் அமைப்பின் தலைவரும் பொதுச் செயலாளார் நன்கொடையாக வழங்குவதாக தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய இலங்கைக்கு வருகை தந்தமையையிட்டு பிரதமர் அவருக்கு நன்றி தெரிவித்தார்.