ஆங்கில ஊடகம் ஒன்று இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லியை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்புடன் ஒப்பிட்டு உலக விளையாட்டின் டிரம்ப் ஆகிறார் விராட் கோஹ்லி என்று வர்ணித்துள்ளது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
‘The Daily Telegraph’ என்ற ஆஸி ஆங்கில ஊடகமே விராட் கோஹ்லியை சாடி கட்டுரை ஒன்ற வெளியிட்டுள்ளது..
அதில், ராஞ்சி தொடரில் கோஹ்லி ஓட்டங்கள் எடுக்க முடியாமல் இருப்பதை அவுஸ்திரேலிய பந்து வீச்சாளர்கள் ஓட்டங்களுடன் ஒப்பிட்டு சிறுமைப்படுத்தியுள்ளது.
மேலும், ராஞ்சி தொடரின் போது கோஹ்லிக்கு எற்பட்ட காயம் காரணமாக ஊடகங்கள் வெளியிட்ட தவறான புகைப்படத்தால் பல சர்ச்சைகள் ஏற்பட்டது.
இதை, டொனால்ட் டிரம்ப் போலவே தன் முகத்தின் மீது அடிக்கப்பட்ட முட்டையை மறைக்க ஊடகத்தை குறை கூறுகிறார் விராட் கோஹ்லி என குறிப்பிட்டு எழுதியுள்ளது.
மேலும்,”… கிரிக்கெட் உணர்வை கோஹ்லி சாகடித்துள்ளார். முன்னாள் இலங்கை அணித்தலைவர் அர்ஜுணா ரணதுங்காவுடன் கோஹ்லியை ஒப்பிட்டு எதிரணியினரை இருவரும் கடுமையாக மரியாதையின்றி நடத்துவர்…” என எழுதியுள்ளது.

கட்டுரையின் முடிவில், ‘மென்மையான கிரிக்கெட் நிர்வாகிகளால் மட்டை சுழற்றும் ட்ரம்ப் எழுந்துள்ளார்’ என்று கோஹ்லியை ட்ரம்புடன் ஒப்பிட்டுள்ளது. ஆனால் கிளென் மேக்ஸ்வெல், கோஹ்லியின் தோள்பட்டைக் காயத்தை கிண்டல் செய்தது பற்றி இந்தக் கட்டுரையில் எதுவுமே பதிவாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.