இருபதுக்கு20 கிரிக்கெட் போட்டிகளில் கைப்பற்றப்பட்ட விக்கெட்கள் எண்ணிக்கையில் 300 இனை கடந்த உலகிலேயே இரண்டாவது சிறந்த பந்து வீசுபவராக லசித் மாலிங்க புதிய சாதனையினை நேற்று(15) அவுஸ்திரேலிய பிரதமர் பதினொருவர் அணிகளுக்கு எதிரான போட்டியில் சாதித்திருந்தார்.
நேற்று (15) நடைபெற்ற போட்டியில் 26 ஓட்டங்களுக்கு 1 விக்கெட் இனை கைப்பற்றியே மேற்குறித்த இந்த சாதனையில் லசித் மாலிங்க உட்சேர்ந்துள்ளதோடு, இருபதுக்கு20 போட்டிகள் 222இல் ஆடியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மேற்கிந்திய அணிகளது வீரர் Dwayne Bravo இருபது20 கிரிக்கெட்டில் 300 விக்கெட்களை பெற்று முதலிடத்திலுள்ள நிலையில், அவர் இருபதுக்கு20 போட்டிகள் 344 இல் பங்கேற்று 367 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார்.