உல்லாசப் பயணத்துறையை அபிவிருத்தி செய்யும் நோக்கோடு, கொழும்பு கிறீன் பாத் வீதி கிறிஸ்மஸ் வீதியாக இன்று(22) மாலை பிரகடனப்படுத்தப்படும். இந்தத் திறப்பு விழா வைபவம் உல்லாசப் பயணத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்கவின் தலைமையின் கீழ் இன்று மாலை 6.30க்கு இடம்பெறவுள்ளது.
ஏற்கனவே கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் உல்லாசப் பயணத்துறை அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டு வரும் உல்லாசப் பயணத்துறை விழாவிற்கு மேலதிகமாக இடம்பெறும் ஒரு நிகழ்வு இது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த வீதி டிசம்பர் 24 வரை கிறிஸ்மஸ் வீதியாக தொடரும்.
சுமாராக ஒரு கிலோ மீற்றர் வரை நீளும் 50 விற்பனை நிலையங்களுடன் கூடிய இவ்வீதி பரிசுப் பொருட்கள் உள்ளடங்கலாக பல்வேறு பொருட்கள் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பின் உயர்தர ஹோட்டல்களால் அமைக்கப்பட்ட 15 விற்பனை நிலையங்கள் பாரம்பரிய உணவுகளுடன், விசேட கிறிஸ்மஸ் உணவுகளையும் வழங்கும்.
பிற்பகல் 2.00 மணி தொடக்கம் இரவு 11.00 மணி வரை விற்பனை நிலையங்கள் திறந்திருக்கும் இசை நிகழ்வுகளும் இங்கே இடம்பெறும்.