புதிய தேர்தல் முறையூடாக நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலில் சற்றுமுன்னர்(11.00 A.M) மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்ற அமைச்சர் பைஸர் முஸ்தபா கைச்சாத்திட்டார்.
—————- update 01.11.2017 (8.13 A.M)
புதிய தேர்தல் முறையின் கீழ் நடைபெறவுள்ள உள்ளுராட்சிமன்ற தேர்தலுக்கான வர்த்தமானி அறிவிப்பு இன்று(01) கைச்சாத்திடப்படவுள்ளது.
மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா இன்று(01) அமைச்சில் இந்த வர்த்தமானிக்கு கையெழுத்திடவுள்ளார்.
வர்த்தமானி அறிக்கைக்கு கையெழுத்திட்ட பின்னர் உள்ளுராட்சி தேர்தல் நடைபெறும் முறை குறித்து ஊடகங்களுக்கு அமைச்சர் தெளிவுப்படுத்த எதிர்பார்த்துள்ளார்.