உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் விநியோகம்…

உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டையை விநியோகிக்கும் நடவடிக்கை இன்று(18) ஆரம்பமாகவுள்ளது.

அடுத்த மாதம் 10ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் ஒரு கோடி 50 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் தேர்தலில் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர்.

ஐந்து லட்சத்து 60 ஆயிரம் பேர் தபால் மூலம் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளார்கள். தபால் மூல வாக்களிப்பு இம்மாதம் 25ஆம் ஆரம்பமாகவுள்ளது.