உள்ளூராட்சிமன்றங்களுக்கு தெரிவாகியுள்ளவர்களின் பெயர் விபரங்கள் அடங்கிய வர்த்தானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படவுள்ளது.
பெண் பிரதிநிதித்துவம் தொடர்பான பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு வருவதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் ஆர்.எம்.எல்.ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.
புதிய உள்ளுராட்சி நிறுவனங்களின் பதவிக்காலம் செவ்வாய்க்கிழமை ஆரம்பமாவதாகவும் அவர் கூறியுள்ளார்.
புதிய உறுப்பினர்களின் பெயர் விபரங்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தலை இன்று(15) நள்ளிரவுக்குள் வெளியிட முடியும் என அரசாங்க அச்சகர் கங்கானி கல்பனா லியனகே நம்பிக்கை வெளியிட்டார். தேர்தல் ஆணைக்குழுவின் கோரிக்கைக்கு அமைய, உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக அவர் மேலும் கூறியுள்ளார்.