உள்ளூராட்சி மன்றங்கள் குறித்த தேர்தல் திருத்தச் சட்ட மூலம் எதிர்வரும் ஜுலை மாதம் வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டால், ஒக்டோபர் மாதம் அளவிலேயே உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்தப்பட முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
தேர்தல் கண்காணிப்பு அமைப்பான கெபே அமைப்பு நடத்திய கருத்தரங்கு ஒன்றில் வைத்து அவர் தெரிவித்தார்.
தேர்தல் திருத்தச் சட்ட மூலம் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டு, சபாநாயகர்
கைச்சாத்திட்டதன் பின்னர், தேர்தல்களை ஒழுங்கு செய்வதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு குறைந்த பட்சம் 75 நாட்கள் அவகாசம் தேவைப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.