உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டமூலத்தில் திருத்தங்களை கொண்டுவர அரசு தீர்மானம்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டமூலத்தில் திருத்தங்கள் கொண்டு வருவதற்கு அரசு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய 2012 இலக்கம் 22இன் கீழ் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் திருத்தங்கள் கொண்டு வரப்படுவது தொடர்பில் கலந்துரையாடல்களை மேற்கொள்ளவும் அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் உள்ளூராட்சி மன்ற அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

அத்துடன் குறித்த அமைச்சரவை குழுவானது அமைச்சர் பைஸர் முஸ்தபாவின் தலைமைத்துவத்தின் கீழ் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், துமிந்த திசாநாயக்க, சுசில் பிரேமஜயந்த, வஜிர அபேவர்தன், ரிசாட் பதியுதீன், மஹிந்த அமரவீர , விஜயதாச ராஜபக்ஸ மற்றும் மனோ கணேசன் ஆகியோர் அந்த குழுவில் அடங்குவதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

மேலும் இந்த குழுவின் செயலாளர் மற்றும் ஏற்பாட்டாளராக உள்ளூராட்சி மன்ற அமைச்சின் செயலாளர் கமல் பத்மசிறி நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலக்கம் 22இன் கீழ் உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொழில்நுட்ப பிரச்சினைகளை தீர்ப்பதும், உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் யோசனைகளை பரிசீலித்தல் என்பன இந்த குழுவின் நோக்கம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நேற்று இதுதொடர்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே உள்ளூராட்சி அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.