உள்ளூராட்சி மன்றத் தேர்தல் கட்டளைச் சட்டத்தை வர்த்தமானியில் பிரசுரிக்க அரசு தீர்மானம்..

மீளாய்வு செய்யப்பட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தல் கட்டளைச் சட்டத்தை வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும், பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

குறித்த இந்த சட்டமூலத்திற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள விடயங்களின் அடிப்படையில் மேலதிக திருத்தங்களை பாராளுமன்ற செயற்குழு கூட்டத்தின் போது சேர்த்துக் கொள்வதற்கும் அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

பல்லின தொகுதிகளுக்கான வேட்பாளர்களை முன்நிறுத்தும் வழிமுறைகள் தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழுவினால் சுட்டிக் காட்டப்பட்டுள்ள விடயங்கள், பாராளுமன்ற செயற்குழு கூட்டத்தின்போது சட்டமூலத்தில் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளன.

உத்தேச சட்டமூலத்தின் சில சரத்துகளை, பாராளுமன்ற விசேட பெரும்பான்மையுடன் நிறைவேற்றிக் கொள்ள முடியும் என சட்ட மாஅதிபர் சுட்டிக்காட்டியுள்ளதால், அதனை சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்றக் கூடியவாறு மீண்டும் சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்க தகவல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

(rizmira)