உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திருத்தச் சட்டத்திற்கு சபாநாயகர் ஒப்புதல்..

பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட உள்ளூராட்சித் தேர்தல் திருத்தச் சட்டத்திற்கு இவ்வாரத்திற்குள் ஒப்புதல் கையொப்பமிடவுள்ளதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்

அது தொடர்பான ஊடகவியலாளர்களின் கேள்வியொன்றுக்குப் பதிலளித்த சபாநாயகர் கரு ஜயசூரிய, சட்ட மா அதிபர் திணைக்களம் குறித்த சட்டமூலத்தை தயாரித்து அதற்கான மொழிபெயர்ப்புகளுடன் தனக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அதனை விரைவாக செய்து முடிக்குமாறு தான் சட்டமா அதிபர் திணைக்களத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

அவ்வாறு சட்டமூலம் கைக்கு கிடைக்கும் பட்சத்தில் இந்த வாரமே அதற்கான ஒப்புதல் கையொப்பமிடத் தான் தயாராக இருப்பதாகவும், உள்ளூராட்சி மன்றங்களை மிக விரைவில் இயங்கச் செய்வது தனது எதிர்பார்ப்புகளில் ஒன்று என்றும் அவர் தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.

 

(rizmira)