ஊடகங்களிடம் சீறிப்பாய்ந்த யுவராஜ் சிங்

இந்திய அணியின் அதிரடி வீரரான யுவராஜ் சிங், தன்னை பற்றி தவறான செய்திகளை வெளியிட்ட ஊடகங்கள் மீது பாய்ந்துள்ளார்.

கடந்த 1996ம் ஆண்டு பியர்ஸ் குரூப்ஸ் என்ற நிறுவனம் தொடங்கப்பட்டது. ரூ. 1000 செலுத்தினால் ஒரு மாதத்தில் இரு மடங்கு பணம் தருவதாக அந்நிறுவனம் கூறியது.

அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் பிரட் லீ தான் இந்நிறுவனத்தின் தூதுவராக இருந்தார்.

கடந்த 20 ஆண்டுகளாக மோசடியில் ஈடுபட்டு வந்த இந்த நிறுவனம் ரூ.45 ஆயிரம் கோடி வரை மக்களை ஏமாற்றியது.

இது தொடர்பாக இந்நிறுவனத்தின் தலைவர் நிர்மல் சிங்கை மத்திய புலானய்வு துறை (சிபிஐ) சமீபத்தில் கைது செய்தது.

மேலும், இந்நிறுவனம் கிரிக்கெட் வீரர்களான யுவராஜ், ஹர்பஜன் உள்ளிட்ட பல பிரபலங்களுக்கு நிலங்களை அன்பளிப்பாக வழங்கியதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டது.

இந்நிலையில் ”என் மீதும் ஹர்பஜன் சிங் மீதும் உறுதியற்ற குற்றசாட்டுகளை சுமத்தும் முன் அது உண்மை தானா என முதலில் ஆராய்ந்து கொள்ளுங்கள்” என யுவராஜ் சிங் டுவிட்டரில் கடுப்பாக கூறியுள்ளார்.

Just to clarify about a baseless and irresponsible report from a certain section of the media on me and @harbhajan_singh Pearl group

— yuvraj singh (@YUVSTRONG12) January 19, 2016

மேலும், ”2011ம் ஆண்டு உலகக்கிண்ணம் வென்ற அணி என்ற முறையில் அவர்கள் நிலங்களை அன்பளிப்பாக கொடுப்பதாக கூறினர். ஆனால் நாங்கள் அவர்களிடம் இருந்து வாங்கவில்லை. இதை தவிர அவர்களுடன் எந்த தொடர்பும் இல்லை” எனக் கூறியுள்ளார்.

informed us to gift a plot as part of world cup winning team in2011However we have not received that plotWe have no other involvement

— yuvraj singh (@YUVSTRONG12) January 19, 2016