ஊடகத்துறைக்கு உதவ அமைச்சரவை அனுமதி!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  

வெகுசன ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தனவின் முன்மொழிவைக் கருத்தில் கொண்டு, சினிமா மற்றும் தொலைக்காட்சி துறையின் வளர்ச்சிக்கு தேவையான வசதிகள் மற்றும் வழிகாட்டுதல்களை வழங்குவதற்கு ஒரு சுயாதீனமான ஒழுங்குமுறை நிறுவனத்தை நிறுவுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டது.