ஊரில் என்றால் ஊடகவியலாளர்களுக்கு கன்னத்தில் அறைந்திருப்பேன் என எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
கட்சியில் ஐக்கியமில்லை என சில ஊடகவியலாளர்கள் செய்திகளை சூடாக்க திரிவுபடுத்தி பொய்ச் செய்திகளை எழுதுகிறார்கள். ஊரில் இருந்தால் அவ்வாறான ஊடகவியலாளர்களை கன்னத்தில் அறைந்திருப்பேன். இவ்வாறு பொய் செய்திகளை போட்டதற்காக.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த குருணாகல் மாவட்டத்தில் போட்டியிடுவார்.
எந்த மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட விருப்பம் என மஹிந்தவிடம் கோரிய போது, குருணாகல் மாவட்டத்தில் என பதிலளத்திருந்தார் என நிமால் சிறிபால டி சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.
ஊவா பரணகமவில் நடைபெற்ற கட்சிக் கூட்டமொன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
(riz)