ஊடகவியலாளர்களை நாய்கள் எனதிட்டிய பிரதமர்

ஊடகங்களில் நாய்களுக்கு நாய் வேலை செய்ய இடமளிக்கப்பட முடியாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தெரண தொலைக்காட்சி செய்தி சேவை விமர்சனம் செய்தமை தொடர்பில் அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

ஊடகமொன்றில் யாரையும் விமர்சிக்க அனுமதிக்க முடியாது என கூறிய பிரதமர் . ஊடக நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கு ஒளிபரப்பு அனுமதிப்பத்திரம் வழங்குப்படுகிறது உண்மையில் அவை மக்களுக்காகவே வழங்கப்படுகின்றது என தெரிவித்த பிரதமர் .அதிகளவாக விமர்சனம் செய்யும் ஊடகமொன்றுக்கு தொடர்ந்தும் அனுமதி பத்திரம் வழங்க முடியுமா என்பது சந்தேகமே என அவர் தெரிவித்துள்ளார்.

நிகழ்ச்சிகளை நடவடிக்கைகளை விமர்சனம் செய்வதற்கும் அது பற்றி கருத்து வெளியிடவும் அனைவருக்கும் உரிமை உண்டு என்ற போதிலும், இழிவான முறையில் ஊடக செயற்பாடுகளை மேற்கொள்ள அனுமதியளிக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஊடகங்களில் நாய்களுக்கு நாய் வேலை செய்ய இடமளிக்க முடியாது என பிரதமர் நேரடியாகவே, குறித்த தொலைக்காட்சியை விமர்சனம் செய்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் ஊடக உரிமையாளர்களை அழைத்து விசாரணை செய்ய உள்ளதாகவும், ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டதா என விசாரணை செய்யப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.அதன் பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்க உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்

கொடுங்கோல் ஆட்சி செய்ததாக பிரதமரால் கூறப்படும் மகிந்தவினுடைய ஆட்சியில் இவ்வாறு ஊடகங்கள் நேரடியாக அச்சுருத்தப்படவில்லை என ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்