ஊடகவியலாளர் கீத் நொயாருக்கு தாக்குதல் மேற்கொண்டு காயப்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவ புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் சபை உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயகொடி தெரிவித்துள்ளார்.
குற்றபுலனாய்வு பிரிவினரால் குறித்த அலுவலர் நேற்றிரவு(20) கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
2008 ஆம் ஆண்டு மே மாதம் 22 ஆம் திகதி தெஹிவலை பிரதேசத்தில் கீத் நொயரின் வீட்டின் முன்பாக அவர் தாக்குதலுக்கு உள்ளாகியிருந்தார்.
குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட குற்ற விசாரணை திணைக்களம் குறித்த இராணுவ கோப்ரலை கைது செய்துள்ளதாகவும், குறித்த சந்தேக நபர் 34 வயதான வேகொவ்வ பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் அவர் இன்று(21) கல்கிசை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஏற்கனவே இராணுவ உறுப்பினர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.