துறைமுக அபிவிருத்தி அமைச்சர் அர்ஜூன ரணதுங்கவின் சகோதரரான, துறைமுக அதிகார சபையின் தலைவர் தம்மிக ரணதுங்க ஊடகவியலாளர்களை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் காவல் துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
நிஷாந்த ரணதுங்கவின் பிணை மனு கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது செய்தி சேகரிக்கச் சென்றிருந்த ஊடகவியலாளர்களை அவர் தனது கையடக்க தொலைபேசியினால் புகைப்படம் எடுத்துக் கொண்டதோடு அவர்களை அச்சுறுத்தியும் உள்ளார்.
இதனை அடுத்து ஊடகவியலாளர்கள் வாழைத் தோட்டம் காவல் நிலையத்திலும் மேல் நீதிமன்ற பாதுகாப்புத் தரப்பினரிடமும் முறைப்பாடு செய்துள்ளனர்.
இது தொடர்பில் வாழைத் தோட்ட காவல்துறையினரிடம் எமது செய்திப் பிரிவு வினவியது.
இதன்போது, இந்த முறைப்பாடு சம்பந்தமாக தம்மிக ரணதுங்கவிடம் வாக்குமூலம் ஒன்று பெற்றுக் கொள்ளவுள்ளதாக காவல்நிலைய உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
அத்துடன் தம்மிக ரணதுங்க இதற்கு முன்னரும் ஊடகவியலாளர் ஒருவரை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் தமக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.