இலங்கை ஊடக ஒழுங்குமுறை பேரவை சட்டத்தை இரத்து செய்வதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதாக ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் நேற்றைய(23) ஊடக சந்திப்பில் இது குறித்து கருத்துத் தெரிவிக்கையில்;
செய்தி ஊடகங்களுக்கு தொழில் ரீதியிலான சட்ட விதிகளை ஏற்படுத்தும் சுயாதீனம் பெற்ற ஓர் அமைப்பை ஏற்படுத்துவதற்கும் அரசாங்கம் தயாராக உள்ளதாகவும் அவர் கூறியிருந்தார்.
இது தொடர்பில், கருத்துக்களை எழுத்து மூலம் 2016 ஆண்டு ஒக்டோபர் 30ஆம் திகதிக்கு முன்னர் பொதுமக்களுக்கு தெரிவிக்கமுடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.