ஊடக ஓழுக்க விதிமுறைகளை மீறினால் அரசு நடவடிக்கை – அரச தகவல் திணைக்களம்

நாட்டிலுள்ள ஊடக சுதந்திரத்தைப் பயன்படுத்தியும், ஊடக ஓழுக்க விதிமுறைகளை மீறும் வகையிலும் அரசாங்கத்துக்கும், ஜனாதிபதி உள்ளிட்ட அரசியல் தலைவர்களுக்கும் எதிராக புணைந்துரைக்கப்படும் பொய்யான செய்திகள் சில ஊடகங்களில் வெளியிடப்படுவதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அரச தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி ரங்க களங்சூரிய விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இதனைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்பொழுது நடைமுறையிலுள்ள ஊடக ஒழுங்கு மற்றும் சட்டங்களுக்கு ஏற்ப இதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவதற்கான தேவை அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.