ஊடக முன்னிலையில் நாடகம்.. அனர்த்த நிவாரணங்களுக்கு சம்பளத்தினை அன்பளிப்பாக வழங்கியது ஒரேயொரு பா.உறுப்பினரே..

வெள்ளநிலை மற்றும் மண்சரிவு அனர்த்தங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண உதவிகளுக்காக பாராளுமன்ற உறுப்பினர்களது சம்பளங்களை வழங்குவதாக அண்மையில் பாராளுமன்ற உறுப்பினர்களில் அதிகமானோர் ஊடக முன்னிலையில் கருத்துத் தெரிவித்திருந்தனர்.

எனினும், குறித்த அறிவிப்பின்படி இதுவரை எந்தவொரு பராளுமன்ற உறுப்பினரும் அதற்கு முன்வராத நிலையில் ஒரேயொரு பராளுமன்ற உறுப்பினர் தமது சம்பளத்தினை நிவாரண உதவிக்காக வழங்கியுள்ளதாக பாராளுமன்ற விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, சபாநாயகர் கரு ஜெயசூரிய மட்டுமே இதுவரை பாராளுமன்ற உறுப்பினர் சம்பளத்தினை அரசின் நிவாரண உதவிகளுக்காக வழங்கியுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

(rizmira)