ஊழல்வாதிகள் சாம்பலில் இருந்து மீண்டும் எழுவதற்கு முயற்சி – தந்திர வலையில் சிக்காதீர்கள்..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

நாட்டு மக்களை நெருக்கடிக்குள் தள்ளிய ராஜபக்சக்களும் அவர்களது கும்பலும், அழுது அழுது சாம்பலில் இருந்து எழ முயற்சிக்கின்றது என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

எனவே மீண்டும் ஒருமுறை இந்த பொய்யான தந்திரங்களுக்குள் மக்கள் சிக்கிவிடக் கூடாது என நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவத்துவல தெரிவித்துள்ளார்.

ஊழல் இயக்கம் மீண்டும் எழுவதற்கு மக்கள் இடமளிக்கமாட்டார்கள்

 

எனவே ராஜபக்சவின் முயற்சிக்கு உலகின் தலைசிறந்த நகைச்சுவைக்கான விருது வழங்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவத்துவல தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் ஊழல் குற்றச்சாட்டிற்கு உள்ளான உறுப்பினர்களின் வீட்டில் விசேட கூட்டங்கள் இடம்பெறுவதாகவும் ஜே.சி.அலவத்துவல சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும் இந்த ஊழல் இயக்கம் மீண்டும் எழுவதற்கு மக்கள் இடமளிக்க மாட்டார்கள் என ஜே.சி.அலவத்துவல நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.