பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ இன்றும் பாரிய ஊழல்கள் தொடர்பில் விசாரணை ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகியுள்ளார்.
ரக்னா லங்கா ஆயுத நிறுவனம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
முன்னரும் பல தடவைகளாக கோத்தபாய ராஜபக்ஷவிடம் விசாரணைக்குழுவினால் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்றும் அவர் வாக்குமூலத்துக்காக பிரசன்னமாகுமாறு கேட்கப்பட்டிருந்தார்.
சர்ச்சைக்குரிய அவன்கார்ட் ஆயுதக்கப்பல் விடயத்தில் ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவனத் தொடர்புகள் குறித்தே இவ்வாறு விசாரணைகள் இடம்பெறுகின்றன.