ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியம் தொடர்பாக முன்மொழியப்பட்ட இணைப்புக்கு எதிராக இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் தலைவர் வலுவான ஒரு வழக்கை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் முன்வைக்கப்பட்ட 2016ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்டத்தில் ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியம் என்பவற்றை ஒன்றாக இணைப்பதற்கான யோசனை முன்வைக்கப்பட்டது.
ஆனால் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை. மேலும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் பொருளாதார கொள்கையில் கடந்த வருடம் இது தொடர்பில் பதிவுகளை முன்வைத்தமையும் குறிப்பிடத்தக்கது.
இதற்கான உரிய காரணத்தையும் இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் தலைவர் தெளிவுபடுத்தினார்.அதாவது, இதுபோன்ற இணைப்புக்களை கடந்த வரவு – செலவு திட்டத்தில் இணைத்தும் அது விடுபட்ட பேச்சாக மாறிவிட்டது.
அதேபோல் முன்மொழியப்பட்ட இணைப்பு காரணங்கள் தெளிவூட்டவுமில்லை. மத்திய வங்கியானது ஊழியர் சேமலாப நிதியம் தொடர்பில் வினவியபோதும் பிரதமர் அலுவலகத்திடமிருந்து இருந்து எந்த அடுத்தடுத்த தொடர்புகளும் இருக்கவில்லை.
தொழிற்சங்கங்கள் நாட்டில் உழைக்கும் மக்களுக்கு சொந்தமான பணத்தை பெற்றுக் கொடுப்பதில் தாமதிப்பதென்பது சந்தேகிக்கக்கூடியதானாலும் அது இயற்கைதான்.
ஆனால், அது தற்போது பாரதூரமான விளைவை ஏற்படுத்தும் முகமான அனைத்து தொழிற்சங்கங்கள் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போர்க்கொடி உயர்த்தியுள்ளது.
மேலும், பொருளாதார சீர்திருத்த திட்டங்கள் வெளிப்படையாக இருக்க வேண்டும், தொழிற்சங்கங்கள் ஆட்சேபணைகள், ஊழியர் சேமலாப நிதியத்தை ஒரு மாற்றாக உருவாக்குதல், ஒரு நிரந்தர நடவடிக்கையை அல்லது தீர்வை பெற்று உடனடி நடவடிக்கையாக மாற்றியமைக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இதனடிப்படையில், கடந்த காலத்தில் மத்திய வங்கி நல்ல தடப் பதிவை பெற்றிருந்தது. ஆகவே, ஊழியர் சேமலாப நிதி கட்டமைப்பில் நிர்வாக சிரமங்களை இல்லாமல் செய்து ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியை உரிய முறையில் பெற்றுக் கொடுக்க வேண்டும்.
இதில் ஒரு பங்கு வைத்திருக்கும் தொழிலாளர் வர்க்கத்தினை உருவாக்குவதன் மூலம் ஜனநாயக சோசலிசத்தை அடைய இந்த நாடு நினைத்திருந்தாலும் மத்திய வங்கி ஊழியர் சேமலாப நிதியை தவறாக முதலீடு செய்யாது என வலியுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.