ஊவா மாகாணத்தின் 23 பாடசாலைகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை..

ஊவா மாகாணத்தின் 23 பாடசாலைகளில் மண்சரிவு அபாயம் இருப்பதாக தேசிய கட்டிட ஆய்வு பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, பதுளை, தெல்பெத்த வள்ளுவர் தமிழ் வித்தியாலயம், தெல்பெத்த கலைமகள் தமிழ் வித்தியாலயம், பசறை யூரி தமிழ் வித்தியாலயம், க்ளன்-அல்பின் தோட்டம், தியனகல தமிழ் வித்தியாலயம், ஹாலிஎல – ஸ்பிரிங்வெலி மேமலை தமிழ் வித்தியாலயம், சொர்ணாத்தொட்டை, கொபோ தமிழ் வித்தியாலயம், வெலிமடை விஜய வித்தியாலயம், அம்பஹாவத்தை வெவேகம வித்தியாலயம், ஊவா பரணகம, லுனுவத்தை ரகுபொல முஸ்லிம் வித்தியாலயம், பசறை, நமுனுகுல, கனவரெல்ல இலக்கம் 3 மற்றும் இலக்கம் 1 ஆகிய இரண்டு தமிழ் பாடசாலைகளுடன், பசறை கோணக்கலை தமிழ் வித்தியாலயம், ஹல்தமுல்லை, வல்ஹப்புதென்ன மத்திய மகா வித்தியாலயம், ஹல்தமுல்லை, கொஸ்லாந்தை மீரியாபெத்த தமிழ் வித்தியாலயம், ஹல்தமுல்லை, உடவேரிய தமிழ் வித்தியாலயம், பண்டாரவளை – காகலை தமிழ் வித்தியாலயம், பசறை, நமுனுகுல, பிங்கராவ வித்தியாலயம், எல்ல – கினலன் தமிழ் வித்தியாலயம், ஹாலி-எல – ரொசெட் தமிழ் வித்தியாலயம், பண்டாரவளை – லியங்காவலை தமிழ் வித்தியாலயம், பதுளை –வௌஸ்ஸ ராமகிருஷ்ணா தமிழ் வித்தியாலயம், லுனுகலை அல் ஹமீன் பாடசாலை,

பண்டாரவளை மக்குல் எல்ல வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளுக்கு மண்சரிவு அபாயம் இருப்பதாக தேசிய கட்டிட ஆய்வு பணியகத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

(rizmira)