ஊவா மாகாண சபையின் 2019ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டமானது நிறைவேற்றம்..

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னை மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் ஆதரவில் ஊவா மாகாண சபையின் 2019ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டமானது நேற்று(06) இரவு இடம்பெற்ற சபை அமர்வின் போது அதிக வாக்குகள் 28 இனால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மக்கள் விடுதலை முன்னணி சார்பில் சமந்த வித்தியாரத்ன மற்றும் ஆர்.எம்.ஜெயவர்தன ஆகிய உறுப்பினர்கள் எதிராக வாக்களித்திருந்தனர்.