ஊவா மாகாண முதலமைச்சரிடம் இன்று பொலிஸ் விசாரணை..

பதுளை, தமிழ் மகளிர் பாடசாலையின் அதிபரை ஊவா மாகாண கல்வி அமைச்சர் முழங்காலிட வைத்த சம்பவம் தொடர்பில், ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க இடம் இன்று(23) விசாரணைகளை மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது குறித்து விரிவான விசாரணை ஒன்றினை நடாத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பொலிஸ்மா அதிபருக்கு கட்டளை வழங்கியதை அடுத்தே குறித்த விசாரணைக்காக விசேட பொலிஸ் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

குறித்த விசேட பொலிஸ் குழு முதலமைச்சர் மற்றும் அதிபரிடம் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

#rizma