ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க சமர்ப்பித்துள்ள குறைநிரப்புப் பிரேரணைக்கு முன்னாள் முதலமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
மாகாண சபையின் செலவினங்களுக்காக 91 கோடி 21 இலட்சத்து 24,564 ரூபா குறைநிரப்புப் பிரேரணையொன்றை முதலமைச்சர் சாமர சம்பத் மாகாண சபையில் சமர்ப்பித்திருந்தார்.
எனினும் முன்னாள் முதலமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ குறித்த பிரேரணை தொடர்பில் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டதன் காரணமாக தற்போதைக்கு குறை நிரப்புப் பிரேரணை பிற்போடப்பட்டுள்ளது.
அத்துடன் ஊவா மாகாண சபையின் நிதிநிலை தொடர்பில் நிதி ஆணைக்குழு மற்றும் அமைச்சுகளின் செயலாளர்கள் உள்ளிட்ட குழுவொன்றை நியமித்து விசாரணைகள் நடத்தவும் மாகாண சபை அமர்வில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.