ஊவா மாகாண முதலமைச்சருக்கு எதிராக இன்று கண்டன ஆர்ப்பாட்டம்..

பதுளை தமிழ் மகளிர் வித்தியாலய அதிபர் பவானி ரகுநாதன், ஊவா மாகாண முதலமைச்சரால் முழந்தாளிட்டதாக தெரிவிக்கப்படும் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று(30) ஹட்டன் பேரூந்து நிலையத்திற்கு முன்பாக பிற்பகல் 2 மணியளவில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

ஆசிரியர் சமூகத்தையும் அதிபர் சமூகத்தையும் கல்விச் சமூகத்தையும் பெண்கள் சமூகத்தையும் அவமானப்படுத்தியவர்கள் அனைவரையும் உடனடியாக பதவி நீக்கவும், அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தியுமே குறித்த இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.

இலங்கை ஆசிரியர் சங்கம், மலையக ஆசிரியர் முன்னணி, ஆசிரியர் விடுதலை முன்னணி, இலங்கை கல்வி சமூக சம்மேளனம், இலங்கை ஐக்கிய தமிழர் ஆசிரியர் சங்கம் என்பன இணைந்து குறித்த இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கவுள்ளது.

 

#rishma