ரஷ்யாவில் இடம்பெறும் 2018 உலகக் கிண்ண கால்பந்தாட்ட தொடரில் நேற்று(25) நான்கு போட்டிகள் இடம்பெற்றன.
‘A’ பிரிவில் ரஷ்யா மற்றும் உருகுவே அணிகளுக்கு இடையிலான போட்டியில் உருகுவே அணி 3:0 என்ற கணக்கில் வெற்றி கொண்டது.
இதேநேரம் ‘A’ பிரிவில் இடம்பெற்ற பிறிதொரு ஆட்டத்தில் எகிப்திய அணியினை சவுதி அரேபிய அணி எதிர்கொண்டது.
அந்த போட்டியில் சவுதி அரேபியா 2:1 என்ற கோல் கணக்கில் வெற்றிப் பெற்றது.
அதேவேளை, ‘B’ பிரிவில் இடம்பெற்ற ஸ்பெயின் மற்றும் மொராக்கோ அணிகளுக்கு இடையிலான போட்டியில் இரண்டு அணிகளும் தலா இரண்டு கோல்களை பெற போட்டி சமநிலையில் நிறைவுக்கு வந்தது.
போர்த்துக்கல் மற்றும் ஈரான் அணிகளுக்கு இடையிலான போட்டியிலும் இரு அணிகளும் தலா ஒவ்வொரு கோல்களை பெற போட்டி சமநிலையில் நிறைவுக்கு வந்தது.
இதனிடையே இன்றைய தினமும் 4 போட்டிகள் இடம்பெறவுள்ளன.
‘சீ’ பிரிவில் இடம்பெற்றுள்ள அணிகளான அவுஸ்ரேலியா மற்றும் பெரு அணிகளுக்கு இடையிலான போட்டியும், டென்மார்க் மற்றும் பிரான்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியும் இடம்பெறவுள்ளன.
அதுபோல், ‘டீ’ பிரிவில் இடம்பெற்றுள்ள ஐஸ்லேண்ட் அணியும் குரேஷியா அணியும் மோதவுள்ள அதேவேளை, நைஜீரியா மற்றும் ஆர்ஜெண்டினா அணியும் இன்றைய தினம் மோதவுள்ளன.