எகிப்தின் சினாய் பகுதியில் தீவிரவாதிகள் தாக்குதல் 30 பேர் பலி…

எகிப்தின் சினாய் பகுதியில் உள்ள சோதனைச் முகாம் ஒன்றின் மீது நேற்று(15) தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 6 இராணுவ வீரர்கள் மற்றும் மேலும் 24 தீவிரவாதிகள் உயிரிழந்துள்ளனர்.

இதன்போது எகிப்திய இராணுவத் தரப்பினரால் மேற்கொள்ளப்பட்ட பதில் தாக்குதலில் 24 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

எகிப்தின் முன்னாள் தலைவர் முஹம்மது மோர்சி கடந்த 2013ஆம் ஆண்டு பதவி நீக்கம் செய்யப்பட்டதன் பின்னர் எகிப்தின் பல பகுதிகளில் தீவிரவாதிகளின் வன்முறை செயல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.