எகிப்தின் ஜூடோ வீரர் எல் ஷேஹாபி மீது ஒழுக்காற்று நடவடிக்கை..

பிரேஸில் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற எகிப்து ஜூடோ வீரர் ஒலிம்பிக்கின் அடிப்படை விளையாட்டு ஒழுங்கு முறைகளை உதாசீனம் செய்தார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

எகிப்தின் ஜூடோ வீரர் El Shehaby  சக வீரருடன் கைலாகு செய்யவும் தலை சாய்க்கவும் மறுத்துவிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இஸ்ரேல் வீரர் Ori Sasson உடன் நடைபெற்ற போட்டியின் போது எகிப்து வீரர் தோல்வியைத் தழுவியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து ஜூடோ விதிகளின் அடிப்படையில் கைகுலுக்கி, தலை வணங்கி தோல்வியை ஒப்புக்கொள்ள வேண்டும்.

எனினும் எகிப்து வீரர் இந்த அடிப்படை நியதிகளை உதாசீனம் செய்யும் வகையில் நடந்து கொண்டார்.

பின்னர் எழுந்த எதிர்ப்புக்களைத் தொடர்ந்து இஸ்ரேல் வீரருக்கு எகிப்து வீரர் கைகொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.